வைகுண்டத்தில் பள்ளிகொண்ட பெருமாள் ஸ்ரீமன் நாராயணருக்கு நம் பாரத தேசத்தில் எண்ணற்ற பல திருத்தலங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் பண்ணிரு ஆழ்வார்களால் பாசுரம் பாடி மங்களாசாசனம் பெற்ற 108 திவ்யதேசங்கள் மிக முக்கிய சிறப்புடையவை. இதில் தமிழகத்தில் 84 வைணவ திருத்தலங்களும், சோழமண்டலத்தில் 40 ம் அமைந்துள்ளன. இந்த 108 திவ்ய தேசங்களில் 19ஆவது ஆக அமைந்து, மேலும் கடற்கரை திவ்யதேசங்களில் ஏழினுள் ஒன்றாக அமைந்து சிறப்பு பெற்ற திருத்தலமே நாகப்பட்டினம் ஆகும்.
கோயில் அமைப்பு
திருமஞ்சன மேனியான சுவாமியின் இடையே அலங்கரிக்க தசாவதார திருவுருவங்கள் பதிக்கப்பட்ட ஆபரணம் சாற்றப்பட்டுள்ளது. உற்சவரும் மூலஸ்தானத்தில் இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளார். சோழர் கால கருங்கல் திருப்பணியில் அமையப்பெற்ற முதல் திருச்சுற்றில் வடக்கு நோக்கியவாறு துர்க்கை சன்னதியும் அமைந்துள்ளது.
மூலவர் எழுந்தருளியிருக்கும் விமானம் பத்ரக்கோடி விமானமாகும். மேலும் சன்னதியில் பள்ளிகொண்ட பெருமாளாக அரங்கநாதர் கிடந்த திருக்கோலத்தில் புஜங்க சயனத்தில் எழுந்தருளியுள்ளார். இச்சன்னதியில் கண்டன், சுகண்டன் ஆகியோரின் திருவுருவமும், மற்றும் விசேஷமாக அஷ்ட புஜங்களுடன் கூடிய நரசிம்மமூர்த்தி ஒரு கையால் பிரகலாதனை ஆசீர்வதித்து மற்றொரு கையில் அபயம் காட்டி, மடியில் இரண்யனை கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் பஞ்சலோக உற்சவர் விக்ரகமாக எழுதியுள்ளார்.
அடுத்து அமர்ந்த திருக்கோலத்தில் கோவிந்தராஜர் சன்னதி அமைந்துள்ளது. மூலவர் சௌந்தரராஜ பெருமாள் சன்னதியின் இணையாக இருபுறமும் ஸ்ரீ சௌந்தர்யவல்லி மகாலட்சுமி தாயார் மற்றும் ஆண்டாள் நாச்சியார் தனி கொடிமரத்துடன் சன்னதி கொண்டுள்ளனர். மேலும் வெளி திருச்சுற்றில் ஸ்ரீ வைகுந்த பெருமாள், ஸ்ரீ சீனிவாச பெருமாள், சொர்க்கவாசல், ஸ்ரீ ராமர் சன்னதி, ஆஞ்சநேயர் சன்னதி, பசுமடம் ஆகியன அமைந்துள்ளன.
திருத்தலப் பாடல்கள்
இங்கு எழுந்தருளி இருக்கும் ஶ்ரீ சௌந்தரராஜ பெருமாளை திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். தனது பெயருக்கு ஏற்றார் போல தன்னை ஒரு மங்கையாக பாவித்து பெருமாளின் அழகில் மயங்கி பாடும் விதமாக "பொன் இவர் மேனி மரகதத்தின்" எனும் பாசுரம் அமைந்துள்ளது. முதல் ஒன்பது பாடல்களின் நிறைவிலும் "அச்சோ ஒருவர் அழகியவா" என்று வியந்து பாடி பத்தாவது பாடலில் தான் தலத்தின் பெயரை நாகை என குறிப்பிடுகிறார்.
மேலும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார், திருக்குறுக்கைபெருமான் கவிராயர், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரும் பெருமாளை குறித்து பாடல்கள் இயற்றியுள்ளனர்.
உற்ச்சவ படங்கள் , புராண படங்கள் உதவி ஸ்ரீராமன் பட்டர்
திருவிழாக்கள்
திருநாகை அழகியார் சன்னதியில் வருடத்தின் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும் சிறப்பாகும்.
சித்திரை மாதம் மகம் நட்சத்திரம் முன்னிட்டு திருஅவதாரம் உற்சவம், மற்றும் அக்ஷய திருதியை அன்று கருட சேவை.
வைகாசி மாதம் வசந்த உற்சவம்.
ஆனி மாதம் ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் பிரம்மோற்சவம் நடைபெறும். அப்பொழுது தாயார் (பெண்) கருடி வாகனத்தில் எழுந்தருளுவது மற்ற (சோழமண்டல) திருத்தலங்களில் இல்லாத தனிச்சிறப்பாகும். மேலும் மூலவருக்கு ஆண்டில் ஒருமுறை நடைபெறும் 108 கலாசாபிஷேகமும் விசேஷமானது.
ஆடி மாதம் உற்சவருக்கு ஜேஷ்டாபிஷேகதின் போதே திருமேனி திருமஞ்சனம் நடைபெறும். மற்றும் ஆடிப்பூரம் ஆண்டாள் நாச்சியார் திருஅவதார உற்சவம் நடைபெறும்.
ஆவணி மாதம் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி உற்சவம்.

ஐப்பசி மாதம் சகஸ்ர தீப உற்சவம். மணவாள மாமுனிகள் உற்சவம்.
கார்த்திகை மாதம் பவித்திர உற்சவம்.
மார்கழி மாதம் பெருமாள் அத்யாயன உற்சவம்.
தை மாதம் தாயார் அத்யாயன உற்சவம்.
மாசி மகம் பெருமாள் கடலுக்கு எழுந்தருளி தீர்த்தவாரி.
பங்குனி மாதம் பெருமாள் பிரம்மோற்சவம்.
ஸ்தல வரலாறு
பிரம்மாண்ட புராணத்தில் உத்திர பாகத்தில் பத்து அத்தியாயங்கள், ஞானயோக பாகமாக இத்திருத்தலத்தின் மகிமை எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
துருவனுக்கு பெருமாள் காட்சியளித்தல் |
உத்தானபாத மகாராஜா என்பவருக்கு இரண்டு மனைவிகள். அவர்களில் ஒருவர் மற்றொருவரின் குழந்தையான துருவனை இகழ்ந்து பேசிட, அவனோ தன் தாயிடம் நடந்ததைக் கூறி மன வேதனை அடைந்தான். அந்த தாயோ அவனுக்கு ஆறுதல் கூறி, ராஜ்ய பரிபாலனங்களுக்கு மேலான பேரின்ப நிலையை அடையும் வழியை காண்பிக்க அவனை நாரத முனிவரிடம் அழைத்துச் சென்றார்.
நாரத முனிவரும் அப்பாலகன் துருவனுக்கு மேலான அஷ்டாக்ஷர நாராயண மந்திரத்தை உபதேசித்து அது சித்தியாகும் இடமான கடற்கரை அருகே அமைந்துள்ள சௌந்தர்ய ஆரண்யம் எனும் நாகப்பட்டினம் நகரை காண்பித்து அருளினார். அதன்படியே துருவனும் சௌந்தர்ய வனம் அடைந்து கடும் தவம் புரிந்தான். விளையாடி மகிழ வேண்டிய வயதில் இவ்வாறு கடும் தவம் செய்யும் சிறுவனைக் கண்டு மற்ற தேவர்கள், முனிவர்கள் ஆச்சரியப்பட்டனர். பல காலம் உணவு உண்ணாது செய்த தவத்தினால் அவன் உடல் மெலிந்தது, தவத்தின் கனல் பெருகியது.
அத்தவத்தின் பயனால் வைகுண்டத்தில் பள்ளிகொண்ட பெருமாள், கருடன் மீதேறி துருவனுக்கு காட்சியளித்தார். பேரொளி மிக்க அழகிய சொரூபத்தை கண்ட அவன் தான் கேட்க வேண்டிய வரத்தை மறந்து, இறைவனைப் பலவாறு புகழ்ந்து இக்கோலத்திலேயே இங்கு எழுந்தருள வேண்டும் என வேண்டி நின்றான். ஸ்ரீமன் நாராயணரும் துருவனுக்காக அவ்வாறே அருளி இத்தலத்திலேயே கோயில் கொண்டார். அவனும் பூவுலகில் பெருவாழ்வு வாழ்ந்து பின்னர் வானுலகில் தனிப்பெரும் சுடராய் துருவ நட்சத்திரம் ஆக நிலைகொண்டு அழியாப் புகழ் பெற்றான்.
சார புஷ்கரணி
இத்தலத்திலே பெருமாள் எழுந்தருளப் போகிறார் என்பதை முன்னதாகவே அறிந்த ரிஷிகளும், முனிவர்களும் பாரத தேசத்தில் நிறைந்துள்ள பல புண்ணிய நதிகளான கங்கை, கோதாவரி, பிரம்மபுத்திரா, கிருஷ்ணா, தாமிரபரணி,காவேரி ஆகியவற்றின் சாரத்தைப் பிழிந்து ஒன்றாக்கி இங்கே தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். எனவே இதற்கு சார(ம்) புஷ்கரணி என்ற பெயர் ஏற்பட்டது. இக்குளத்தின் அஷ்ட திக்குகளிலும் பல மகத்துவங்களை பெற்றுள்ளதால் இதில் எண்ணற்ற முனிவர்களும், தேவர்களும் நீராடி பாவம் கலைந்து பல மென்மை அடைய பெற்றுள்ளனர்.
இதன் மகத்துவத்தை உணர்த்த ஓர் உட்கதை ஒன்று தொடர்கிறது..
விந்திய தேசத்தில் வசு என்ற பிராமணன் தனது இரு மகன்களான கண்டன், சுகண்டன் ஆகியோருக்கு தன்னிடம் உள்ள பொருட்களை சமமாக தந்து துறவரம் சென்றார். அந்த சகோதரர்கள் அவற்றை நல்வழியில் செலவழிக்காமல் அதர்ம வழியில் செயல்பட்டதால் அவர்கள் மன்னரால் தூக்கு தண்டனை பெற்றனர்.
தூக்கு தண்டனை முடிந்து உடல் எரியூட்டப்பட்ட பின் யமலோகம் சென்ற அவர்கள் தர்மராஜா முன் நிறுத்தப்பட்டு சித்திரகுப்தனால் பாவ புண்ணிய கணக்குகள் பார்க்கப்பட்டன. அப்போது அவர்களின் ஒருவரின் உடல் எரியூட்டப்பட்ட பின் அதில் இருந்த எலும்பு ஒன்றைக் கழுகு ஆனது சௌந்தர்யா வானத்தில் போட்டுவிட்டது. அதன்மீது இந்த சாரபுஷ்கரணி நீரின் ஒரு துவலை அதில் தெளித்தால் அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கின எனவே அவனும் பல தலைமுறைகள் செய்த பாவங்கள் நீங்கி வைகுண்ட பிராப்தி பெற்றான்.
நான்கு யுகங்களில் பெருமாள் காட்சி அளித்தல்.
பெருமாள் ஆதிசேஷனுக்கு கிருதயுகத்தில் காட்சி |
ஒருமுறை பூவுலகில் அதர்மம் அதிகரித்ததால் பூமாதேவி பாரம் தாங்காது பிரம்மாவை நாடுகிறாள். பிரம்மாவும் அதற்கு உபாயமாக பூமாதேவியுடன் ஸ்ரீமன் நாராயணனை பணிகின்றனர். மஹா விஷ்ணுவும் மனமிரங்கி பூதேவியின் கோரிக்கையை ஏற்று அதனை போக்குவதாக கூறினார். மகாவிஷ்ணு பூதேவியிடம், முன்னதாக சௌந்தர்ய வனத்தில் ஆதிசேஷன் எனது வருகைக்காக தவமியற்றி கொண்டிருக்கிறான், அங்கு நீயும் சென்று தவம் செய்யும்படி கூறி அருள்கிறார்.
அதன்படி சௌந்தரிய வனத்தில் பெருமாளின் வருகைக்காக தவமியற்றி கொண்டிருந்த ஆதிசேஷனுக்காக கிருதயுகத்தின் துவக்கத்தில் சித்திரை மாதம் சுக்லபட்ச துவாதசி திதி, மகம் நட்சத்திரம், புதன்கிழமை அன்று சார புஷ்கரணியின் தென்மேற்கு திசையில் ஸ்ரீமன் நாராயணர் , சௌந்தரராஜன் ஆக ஸ்ரீமகாலட்சுமியோடு திருஅவதாரம் செய்தார்.
பின்னர் பூமி தேவியின் கோரிக்கையை ஏற்று அருள்புரிய துவாபரயுகதில் பிரத்யட்சமாகி காட்சி தந்தருளினார்.
திரேதாயுகத்தில் மார்க்கண்டேய முனிவர் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை நித்திய பூஜைகள் செய்து ஆராதிக்கிறார்.
அடுத்ததாக கலியுகத்தில் நாகராஜனுக்கும், சாலி சுக மகாராஜாவுக்கு காட்சியளித்த அருள்புரிந்த வரலாற்றை தொடர்ந்து சந்திப்போம் ..
நாகராஜன் மற்றும்சாலி சுக மகாராஜாவுக்கு பெருமாள் அருளுதல்
வெகுகாலம் குழந்தையில்லாமல் இருந்த நாகராஜனுக்கு பின்னர் மூன்று ஸ்தனங்கள் உடன் கூடிய பெண் மகவு ஒன்றை பெற்றான். அதனை கண்டு அவன் வருத்தம் கொண்டிருந்தான். அப்பொழுது அசரீரியாக உன் மகளை உரிய காலத்தில் ஒரு புற்றின் வழியாக பூவுலகிற்கு அனுப்புவாயாக, அங்கே அவளுக்கான மணாளனை அவள் காணும் போது அந்த மூன்றாவது ஸ்தனம் மறையும் என ஒலித்தது.
அவ்வாறே அவள் பருவம் எய்திய உடன் நாகராஜன் அவளை ஒரு புற்றின் வழியாக பூவுலகிற்கு அனுப்பினான். அந்த புற்று தோன்றிய இடம் சௌந்தரிய வனமாகும். நாக கன்னிகை தோன்றிய இடம் என்பதால் இதற்கு "நாகபுரி" என்ற பெயரும் ஏற்பட்டது. அங்கே அவள் ஒருவனை கண்டபோது அவளது மூன்றாவது தனம் மறைந்தது, அவனே தனது மணாளன் என்று அவள் உணர்ந்தாள். மனமகிழ்ச்சியுடன் அவனிடம் சென்று தனது கதைகளை கூறினாள். அவனும் அதற்கு சம்மதம் அளித்து அந்த நாக கன்னிகையை அவளது இருப்பிடம் செல்லுமாறும், பின்னர் நாகராஜனிடம் முறைப்படி பெண் கேட்டு வருவதாக கூறினான்.
அந்த சுந்தர புருஷன் தான் சாலி சுகன் என்ற மகாராஜா. அவன் அப்பகுதியை அரசாண்டு வந்து அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாளுக்கு ஆராதனைகள் செய்து பங்குனி மாத பிரம்மோற்சவம் ஆகியவற்றை நடத்தி வந்தான். மனமகிழ்ந்த பெருமாளும் அவனிடம் முன்பே நிச்சயத்த படி நாக லோகம் சென்று அந்த நாக கன்னிகையை மணந்து சிறிது காலம் இருந்து விட்டு வரும்படி அருளினார்.

சாலி சுக மகாராஜாவும் பெருமாளை வணங்கி தாங்களே வழி காட்டிட வேண்டும் என வேண்டி நின்றான். பள்ளிகொண்ட பெருமாளும் சயனித்த திருக்கோலத்தில் இருந்தவாறு இதோ உள்ளது என காட்ட அவனும் அதன் வழியே சிறிது தூரம் சென்று மீண்டும் வழி காணாது திரும்பி விடுகிறான். பின்னர் அம்மன்னன் மீண்டும் பெருமாளை வேண்டி இருக்க ஸ்ரீமந் நாராயணரும் எழுந்து அமர்ந்த கோலத்தில் வழியை காட்டி அருளினார்.
மீண்டும் வழி புலப்படாது பெருமாளை சரணடைந்தான் மன்னன். பெருமாளும் எழுந்து நின்றவாறு இதோ உள்ளது என வரத முத்திரை காட்டி அருளினார். பின்னர் அதுவே நின்று, இருந்து, கிடந்த கோலமாக வழி காட்டிடும் படி எம்பெருமான் தற்போதும் சேவை சாதிக்கிறார்.
பின்னர் சாலி சுக மகாராஜா பெருமாளின் திருவருளால் நாகலோகமடைந்து நாகராஜனிடம் பெண் கேட்டு அந்த நாக கன்னிகையை மணந்து கொண்டான். சிறிது காலம் இல்லறம் நடத்திவிட்டு தனது தேசத்திற்கு திரும்பி வந்து அரசாட்சி செய்து வந்தான். பின்னர் கர்ப்பவதியான நாக கன்னிகை ஒரு ஆண் மகவு ஒன்றை பெற்றாள்.
அந்தக் குழந்தை பிறக்கும்பொழுது கழுத்து ஒரு கட்டியுடன் பிறந்தது. அவளும் அதை கண்டு பயம் கொண்டு குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து நதியில் விட்டுவிட அது கடலின் வழியாக சாலி சுக மகாராஜா ஆட்சி செய்து வரும் கரையை அடைந்தது. மக்கள் அக்குழந்தையை எடுத்து மகாராஜாவிடம் ஒப்படைத்தனர். குழந்தை கழுத்தில் துந்திக்கை போன்ற உறுப்பு இருப்பதால் அவன் துந்துமாரன் என அழைக்கப்பெற்றான். சாலி சுகன் மகாராஜாவும் தனது மகனை அன்போடு வளர்த்து உரிய காலத்தில் ராஜாங்கத்தை ஒப்படைத்து திருமாலின் திருவடியை அடைந்தார்.

சாலி சுகன் பற்றிய இந்தப் புராண செய்தி சைவ புராணங்களிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றும் இம்மன்னன் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கிய நூல்களிலும் காணப்படுகின்றன. அவற்றையும் காண இங்கே கிளிக் செய்யவும்.
வழித்தடம்
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தின் தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அருகே ரயில்வே நிலையமும், பழைய பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலமாக இக்கோயிலை வந்தடையலாம்.

எழுத்தாகம் தொகுப்பு - நாகை பா.சுபாஷ் சந்திரபோஸ்
அருமை
பதிலளிநீக்குநன்றி
நீக்குகருத்துரையிடுக